நாகை: வாழ்மங்கலம் திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தீமிதி நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.;

Update:2025-08-05 13:54 IST

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், அகரக்கொந்தகை ஊராட்சி, வாழ்மங்கலம் கிராமத்தில் உள்ள திரெளபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா விமரிசையாக நடைபெற்றது. பந்தக்கால் முகூர்த்தம், கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த விழாவில், தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. கர்ணன், தர்மர், கிருஷ்ணன், அம்பாள் பிறப்பு, திருக்கல்யாணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வாகன வீதியுலா நடைபெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்