தஞ்சை: நாகம்ம பேரண்டாள் அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா

தீமிதி விழாவையொட்டி அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.;

Update:2025-08-04 18:03 IST

தஞ்சை மாவட்டம், சேதுபாவாசத்திரம் அருகே உள்ள இரண்டாம்புளிகாடு நாகம்ம பேரண்டாள் அம்மன் கோவிலில் கடந்த மாதம் 24ம் தேதி காப்புகட்டி, பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆடிப்பெருக்கு தினமான நேற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பொங்கல் வைத்து நைவேத்யம் படைக்கப்பட்டது. அதன்பின்னர் முக்கிய நிகழ்வான தீமிதி நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். அதன்பின்னர் கோவில் அருகே அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலும் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் இரண்டாம்புளிகாடு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்