கழுகுமலை சப்பாணி மாடசாமி கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்

கோவிலில் இருந்து புறப்பட்ட முளைப்பாரி ஊர்வலம் ஆம்பல் ஊரணியை சென்றடைந்ததும், அங்கு முளைப்பாரி கரைக்கப்பட்டது.;

Update:2025-08-06 10:54 IST

கழுகுமலை கிட்டங்கி தெருவில் உள்ள சப்பாணி மாடசாமி கோவில் கொடை விழா கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடந்தது. கடந்த மாதம் 31-ந் தேதி மாலை 6 மணியளவில் விளக்கு பூஜை நடைபெற்றது. காலை 10 மணிக்கு பால்குடம், தீர்த்தகுடம் எடுத்து வருதல், மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் உச்சிகால பூஜை நடந்தது.

நள்ளிரவு 12 மணியளவில் சாமகொடை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை 10 மணியளவில் திரளான பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக சென்றனர். கோவிலில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கீழ பஜார், தெற்கு ரத வீதி, பஸ்டாண்ட் சாலை, ஆறுமுகம் நகர் வழியாக சென்று ஆம்பல் ஊரணியை சென்றடைந்தது.

தொடர்ந்து அங்கு முளைப்பாரி கரைக்கப்பட்டது. மதியம் 3 மணியளவில் மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இரவு 7 மணியளவில் சுவாமி மற்றும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்