குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை: 3,011 பெண்கள் வழிபாடு

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் சுமங்கலி பூஜை நடந்தது.;

Update:2025-08-05 13:49 IST

குலசேகரன்பட்டினம்,

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலுக்கு தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வாரந்தோறும் வெள்ளி, செவ்வாய் மற்றும் விடுமுறைநாள், விஷேச நாட்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும்.

இந்நிலையில் முத்தாரம்மன் கோவிலில் 3,011 பெண்கள் கலந்துகொண்ட சுமங்கலி பூஜை நடந்தது. இந்த பூஜையில் பெண்கள் கும்மி அடித்து பாடல்கள் பாடி வழிபாடு செய்தனர். இதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் வள்ளிநாயகம், கோவில் கணக்கர் டிமிட்ரோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்