கலைஞர் பல்கலைக்கழக மசோதா; ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார் கவர்னர் ரவி

கலைஞர் பல்கலைக்கழக மசோதாவில் கையெழுத்திட கவர்னர் மறுத்து விட்டால், தமிழக அரசு கோர்ட்டை அணுகும் என அமைச்சர் கோவி செழியன் கூறினார்.;

Update:2025-08-05 16:43 IST

சென்னை,

தமிழகத்தின் கும்பகோணத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெயரில் பல்கலைக்கழகம் ஒன்றை நிறுவுவது என அரசால் முடிவு செய்யப்பட்டு, அதற்காக சட்டசபையில் கடந்த ஏப்ரல் மாதம் இறுதியில் கலைஞர் பல்கலைக்கழக மசோதா, தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக உயர் கல்வி துறை அமைச்சர் கோவி செழியன் இதனை தாக்கல் செய்த நிலையில், அது ஒப்புதலுக்காக கவர்னர் ஆர்.என். ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அதில் அவர் கையெழுத்திடாத நிலையில், அதுபற்றி பேசிய அமைச்சர் கோவி செழியன், கையெழுத்திட கவர்னர் மறுத்து விட்டால், கோர்ட்டை அரசு அணுகும் என்றார்.

இதேபோன்று, கலைஞர் பல்கலைக்கழகத்திற்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை வேந்தராக்குவது மற்றும் வேந்தருக்கு உதவி அதிகாரியாக தமிழக உயர் கல்வி துறை அமைச்சரை நியமிப்பது தொடர்பான மசோதாவும் கடந்த ஏப்ரலில் தாக்கல் செய்யப்பட்டது.  இந்த சூழலில், கலைஞர் பல்கலைக்கழக மசோதாவை கவர்னர் ஆர்.என். ரவி, ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்