திருப்பூரில் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. வெட்டிக்கொலை - அதிர்ச்சி சம்பவம்
தப்பியோடிய தந்தை-மகன்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.;
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த அலங்கிய தளவாய் பட்டினம் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல். இவர் உடுமலைப்பேட்டை அருகே குடிமங்கலம் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ. ஆக பணியாற்றி வந்தார்.
இதனிடையே, மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரன் தோட்டத்தில் பணியற்றிவந்த மூர்த்தி மற்றும் அவரது 2 மகன்கள் தங்கபாண்டியன், மணிகண்டன் இடையேயான நேற்று பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த பிரச்சினையை விசாரிக்க சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேல் சென்றுள்ளார். அப்போது, மதுபோதையில் இருந்த மூர்த்தி மகன்களுடன் சேர்ந்து சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை அரிவாளால் வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பிச்சென்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து கூடுதல் போலீசார் விரைந்து சென்று, சண்முகவேலின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பியோடிய தந்தை-மகன்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.