குப்பைகளால் வீசும் துர்நாற்றம், கோட்டைக்கு வந்தடையவில்லையா முதல்வரே? - நயினார் நாகேந்திரன்

போராட்டக்காரர்களையும், பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் ஒருசேர தி.மு.க. அரசு அலட்சியப்படுத்துகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார்.;

Update:2025-08-06 21:21 IST

கோப்புப்படம்

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னையில் ஐந்தாவது நாளாகத் தொடரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தால், தலைநகரமே குப்பைக் கூளமாக உருமாறிக் கிடக்கிறது. பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள் மலையாகக் குவிந்து கிடக்கும் குப்பைகளைத் தாண்டி குதித்துச் செல்கிறார்கள். சாலையில் பயணிக்கும் பொதுமக்கள் துர்நாற்றம் பொறுக்காமல் மூக்கை மூடிக் கொள்கின்றனர். எங்கு எப்போது என்ன பெருந்தொற்று உருவாகுமோ என அனைவரும் பதற்றத்தில் உள்ளனர். ஆனால், சென்னை மேயர் பிரியா உள்ளிட்ட ஆளும் தி.மு.க. அரசைச் சேர்ந்த அதிகாரிகளோ, அமைச்சர்களோ, முதல்வரோ போராடுபவர்களின் கோரிக்கைகளுக்கு இதுநாள் வரை செவிமடுக்கவில்லை. குறைந்தபட்சம் அவர்களை நேரில் சென்று சந்தித்து சமாதானம் செய்யவும் இல்லை.

பெருகிவரும் குப்பைகளால் வரப்போகும் ஆபத்தை அறியாமல் தங்கள் வீடு, இடம், அலுவலகம் ஆகியவை மட்டும் சுத்தமாக இருந்தால் போதும் என போராட்டக்காரர்களையும் பொதுமக்களின் ஆரோக்கியத்தையும் ஒருசேர அலட்சியப்படுத்தும் தி.மு.க. அரசு, மக்களிடம் இருந்து இன்னும் எத்தனை எதிர்ப்புகள் கிளம்பினாலும் திருந்தப் போவதில்லை! அடுத்த முறை அரியணை ஏறும் வாய்ப்பும் கிடைக்கப் போவதில்லை! இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்