பா.ம.க. பொதுக்குழு கூட்டம்; அன்புமணி ராமதாஸ் புதிய அறிவுறுத்தல்
பா.ம.க. பொதுக்குழு கூட்டத்தில் ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோர் கட்டாயம் பங்கேற்கும்படி கட்சி தலைமை அறிவுறுத்தி உள்ளது.;
சென்னை,
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர். இருவரும் போட்டி கூட்டம் நடத்துவதுடன், இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டியும் வருகின்றனர்.
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் வரும் 9-ந்தேதி காலை 11 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்புளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறுகிறது. கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என டாக்டர் அன்புமணி தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில், பொதுக்குழுவிற்கு கட்டாயம் பங்கேற்க வேண்டியவர்கள் பற்றிய அறிவிப்பை கட்சி தலைமை வெளியிட்டு உள்ளது.
1. மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில நிர்வாகிகள்.
2. மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகள்.
3. ஒன்றிய, நகர, பேரூர், செயலாளர்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோர் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என்று பா.ம.க. தலைமை அறிவுறுத்தி உள்ளது.
வருகிற 17-ந்தேதி சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.