பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜமை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் முதல்-அமைச்சர்

பிறந்தநாளையொட்டி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், முதல்-அமைச்சரை சந்திக்க விரும்புவதாக ராஜமை தெரிவித்திருந்தார்.;

Update:2025-08-06 23:27 IST

சென்னை,

பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜம். 1950 முதல் 1960களின் இறுதி வரை முன்னணி நடிகையாக இருந்தவர். ரத்தக்கண்ணீர், பெண்ணின் பெருமை, புதையல், தங்கப்பதுமை, நாடோடி மன்னன், பாசமலர், தாலி பாக்கியம், அலிபாபாவும் 40 திருடர்களும், அரங்கேற்றம் போன்றவை அவர் நடித்த முக்கியமான படங்கள். 200 படங்கள் வரை நடித்திருக்கிறார். தற்போது அடையாறில் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.

நேற்று ராஜமை அவரது 90வது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். அப்போது அவர் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், முதல்-அமைச்சரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் பழம்பெரும் நடிகை எம்.என்.ராஜமை நேரில் சந்தித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பான புகைப்படத்தை முதல்-அமைச்சர் அலுவலகம் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

அந்த பதிவில், பழம்பெரும் நடிகை எம்.என். ராஜம் தனது 90-வது பிறந்தநாளையொட்டி நாளிதழுக்கு அளித்த பேட்டியில், முதல்-அமைச்சரை சந்திக்க விரும்புவதாக தெரிவித்திருந்தார். அவரது விருப்பத்தை நிறைவேற்றிடும் வகையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை, அடையாறிலுள்ள பழம்பெரும் நடிகை எம்.என். ராஜமின் இல்லத்திற்கு நேரில் சென்று, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து பேசினார்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்