சென்னையில் இருந்து திருச்சி புறப்பட்ட விமானத்தில் எந்திர கோளாறு - பயணிகள் அவதி
விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.;
சென்னையில் இருந்து திருச்சிக்கு இன்று அதிகாலை 5.45 மணிக்கு இண்டிகோ விமானம் புறப்பட இருந்தது. அந்த விமானத்தில் 73 பயணிகள் பயணிக்க இருந்தனர்.
ஓடுபாதையில் இருந்து புறப்பட்ட தயாரானபோது விமானத்தில் எந்திர கோளாறு ஏற்பட்டு இருப்பதை விமானி கண்டுபிடித்தார்.
இதையடுத்து, விமானத்தை ஓடுபாதையிலேயே விமானி நிறுத்தினார். பின்னர், எந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு 1 மணிநேர தாமதத்திற்குப்பின் விமானம் 6.45 மணியளவில் திருச்சி புறப்பட்டது. காலதாமதத்தால் பயணிகள் அவதியடைந்தனர்.