முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கும் கூட்டணி கட்சி தலைவர்கள்

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது;

Update:2025-08-06 07:29 IST

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக , விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.

இதில், திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில், திமுக கூட்டணி கட்சி தலைவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று சந்திக்கின்றனர். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்டு முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு சண்முகம் ஆகியோர் சந்திக்கின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்