சென்னையில் இன்று 6 வார்டுகளில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்;
சென்னை,
பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (06.08.2025) 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (06.08.2025) திருவொற்றியூர் மண்டலம், வார்டு-6ல் ராஜா சண்முகம் நகர், 4வது தெருவில் உள்ள சமூகநலக் கூடம், மாதவரம் மண்டலம், வார்டு-33ல் பாரதியார் தெருவில் உள்ள ஏழுமலை நாயக்கர் மண்டபம், அம்பத்தூர் மண்டலம், வார்டு-84ல் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு காலனி, கிரண் பேலஸ், அண்ணாநகர் மண்டலம், வார்டு-99ல் ராஜா அண்ணாமலை சாலையில் உள்ள தர்மபிரகாஷ் திருமண மண்டபம், வளசரவாக்கம் மண்டலம், வார்டு-153ல் போரூர், ஆறுமுகம் நகரில் உள்ள பி.ஜே.என்.மஹால், பெருங்குடி மண்டலம், வார்டு-185, திரௌபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள எஸ்.ஆர்.கே. மஹால் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.என தெரிவிக்கப்பட்டுள்ளது.