வார விடுமுறையை முன்னிட்டு ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.;

Update:2025-08-03 17:31 IST

நீலகிரி,

நீலகிரி மாவட்டத்தில் நிலவும் இதமான காலநிலை மற்றும் இயற்கை வளம் மிகுந்த வனப்பகுதிகள் மற்றும் சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். குறிப்பாக வார விடுமுறை நாட்களில் நீலகிரியில் உள்ள சுற்றுலா தளங்களில் மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

கடந்த மாதம் நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் மழை பெய்து வந்ததால் சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்தது. இந்நிலையில், தற்போது மழை குறைந்து இதமான காலநிலை நிலவுவதால் மீண்டும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். இன்று வார விடுமுறையை முன்னிட்டு அதிகாலை முதலே ஊட்டியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

அங்குள்ள அரசு தாவரவியல் பூங்காவில் பூத்துக் குலுங்கும் வண்ண மலர்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் பெரணி இல்லம், கண்ணாடி மாளிகை, இத்தாலியன் பூங்கா, கிக் யூ புல்வெளி உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற சுற்றுலா பயணிகள், தங்கள் குடும்பத்தோடு புகைப்படங்கள் எடுத்தும், அங்கு நிலவிய இதமான வானிலையை அனுபவித்தும் மகிழ்ந்தனர். 

Full View
Tags:    

மேலும் செய்திகள்