சாக்லேட் தருவதாக அழைத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவர் கைது

முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.;

Update:2025-08-03 08:14 IST

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறை - கோவை மெயின் ரோட்டில் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் அருகே வசித்து வருபவர் சங்கர் என்கிற ஜெய்சங்கர் (வயது 50). இவர் பெருந்துறையை சேர்ந்த 14 வயது சிறுமியை சாக்லேட் தருவதாக அழைத்து பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக தெரிகிறது.

உடனே சிறுமி ஓடிச்சென்று தன்னுடைய தாயாரிடம் நடந்ததை கூறியுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் பெருந்துறை அனைத்து மகளிர் போலீசார் ஜெய்சங்கரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். பின்னர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்