கோல்டன்நகரில் ரூ.9.76 லட்சம் மதிப்பில் புதிய மின்மாற்றி: திருநெல்வேலி மேற்பார்வை பொறியாளர் தொடங்கி வைத்தார்

கோல்டன்நகர் விரிவாக்க பகுதியில் மக்கள் பயன்பாட்டுக்கு, வள்ளியூர் கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 76 ஆயிரத்து 200 மதீப்பீட்டில் ஒரு புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.;

Update:2025-08-03 09:57 IST

திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், வள்ளியூர் கோட்டம், வள்ளியூர் பிரிவு அலுவலகத்திற்க்கு உட்பட்ட கோல்டன்நகர் விரிவாக்க பகுதியில் வள்ளியூர் கோட்ட வளர்ச்சி மேம்பாட்டு மதிப்பீட்டு திட்டத்தின் கீழ் ரூ.9 லட்சத்து 76 ஆயிரத்து 200 மதீப்பீட்டில் ஒரு எண்ணம் புதிய மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு ஆகியோரின் சீரான வழிகாட்டலில் புதிய மின்மாற்றி அமைக்கும் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று அனைத்து பரிசோதனைகளும் நிறைவு பெற்றது.

அதனை தொடர்ந்து நேற்று (2.8.2025) திருநெல்வேலி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி புதய மின்மாற்றியை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மின்னூட்டம் செலுத்தப்பட்டு இயக்கி வைத்தார். இந்த புதிய மின்மாற்றி மூலம் அந்த பகுதிக்கு புதிய மின் இணைப்பு வழங்கினாலும் சீரான மின்சாரம் வழங்க ஏதுவாகும். இந்த நிகழ்ச்சியில் வள்ளியூர் கோட்ட செயற்பொறியாளர் வளன்அரசு, வள்ளியூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் ஆனந்த்குமார், வள்ளியூர் பிரிவு உதவி மின் பொறியாளர் ராஜா மற்றும் பணியாளர்கள், அப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்