தீரன் சின்னமலை நினைவு தினம்: எடப்பாடி பழனிசாமி மரியாதை
தீரன் சின்னமலையின் 220வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.;
சுதந்திர போரட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அரசியல் தலைவர்கள் தீரன் சின்னமலைக்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தீரன் சின்னமலைக்கு அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தியுள்ளார். மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி நெல்லையில் உள்ள தனியார் ஓட்டலில் வைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலையின் படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.