திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை: அமைச்சர் கே.என்.நேரு
திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது என்று அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.;
திருச்சி,
திருச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலைய வளாகத்தில் கட்டப்பட்டு வரும் வணிக வளாக பணிகள் மேலும் 2 மாதங்களில் நிறைவு பெற்று திறக்கப்படும். தந்தை பெரியார் காய்கறி அங்காடி கட்டுமான பணிகள் விரைப்படுத்த அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
திமுக கூட்டணியில் கருத்து வேறுபாடு இல்லை. அதிமுகவில்தான் கருத்து வேறுபாடு உள்ளது. அதனால்தான் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமியை விட்டு வெளியேறினார். எடப்பாடி பழனிசாமி கனவு பலிக்காது. மீண்டும் தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்பார். கூட்டணி கட்சிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அரவணைத்து வழிநடத்தி வருகிறார்.
திமுகவை விமர்சித்தால் தான் தன்னை அடையாளம் காட்டிக்கொள்ள முடியும் என அன்புமணி நினைத்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வரும் திட்டங்களை மக்கள் மிகுந்த வரவேற்புடன் ஏற்றுக்கொண்டுள்ளனர். திமுக அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.