என்னுடைய அருமை நண்பர் கலைஞர்: ராமதாஸ் பேச்சு

10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது என்று டாக்டர் ராமதாஸ் கூறினார்.;

Update:2025-08-10 20:18 IST

மயிலாடுதுறை,

பூம்புகாரில் நடைபெற்ற மகளிர் பெருவிழா மாநாட்டில் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:-

பெண்கள் இல்லாமல் நாம் இல்லை; உலகமே இல்லை; பெண்களுக்கு காக்கும் சக்தி உள்ளது பெண்கள் எல்லா வகையிலும் முன்னேற வழிகாட்டுவதற்கே இந்த மாநாடு. கஞ்சா, மது என்ற தீமை ஒழிய வேண்டும்; அதை செய்வது பெரிய காரியம் இல்லை. 10 அதிகாரிகளை என்னிடம் அனுப்புங்கள்; நான் சொல்வதை அவர்கள் கேட்டால் சமூக தீமை ஒழிக்கப்படும். பெண்களை விட ஆண்கள் பின்னால் இருப்பதற்கு இந்த இரு தீமைகள்தான் காரணம்.

என்னுடைய அருமை நண்பர் கலைஞர் கருணாநிதி 20 சதவீத இடஒதுக்கீடு அளித்தார். 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீட்டை வழங்க சாதி வாரி கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவதில் முதல்-அமைச்சருக்கு ஏன் தயக்கம்?. 10.5 சதவீத உள்ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் போராட்டம் நடத்தினால் தமிழ்நாடு தாங்காது.

தந்தையை மிஞ்சிய தனயன் இருக்கக் கூடாது; அதற்கு உதாரணம் ராஜராஜன், ராஜேந்திரன் பெரியகோவிலை விஞ்சிடக் கூடாது என ராஜேந்திரன் நினைத்ததே இதற்கு உதாரணம். 2026 பேரவைத் தேர்தலில் வெற்றி கூட்டணி அமைப்பேன். யார் என்ன சொன்னாலும் காதில் வாங்காதீர்கள்; நான் சொல்வதுதான் நடக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்