சென்னையில் `உங்களுடன் ஸ்டாலின்' முகாம் இன்று 6 வார்டுகளில் நடைபெறும்

இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.;

Update:2025-08-01 01:15 IST

சென்னை,

சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று (வெள்ளிக்கிழமை) 6 வார்டுகளில் நடைபெற உள்ளது. இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். அந்த வகையில், திருவொற்றியூர் மண்டலம், வார்டு-5ல் சவுந்தர பாண்டி நகரில் உள்ள வி.கே மஹால், ராயபுரம் மண்டலம், வார்டு-55ல் ஏழு கிணறு, புனித சேவியர் தெருவில் உள்ள சமூகநலக்கூடம், அண்ணாநகர் மண்டலம், வார்டு-98ல் கீழ்ப்பாக்கம், ஆஸ்பிரன் கார்டன் முதல் தெருவில் உள்ள 98வது வார்டு அலுவலகம், கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-127ல் கோயம்பேடு, காளியம்மன் கோவில் தெரு, சென்னைக் குடிநீர் வாரிய வளாகத்தில் உள்ள பேட்டரி 3 சக்கர வாகன நிறுத்துமிடம், ஆலந்தூர் மண்டலம், வார்டு-157ல் ஆற்காடு சாலையில் உள்ள சான்றோரகம் அரங்கம், அடையாறு மண்டலம், வார்டு-173, கஸ்தூரிபாய் நகரில் உள்ள சமூகநலக் கூடம் ஆகிய 6 வார்டுகளில் நடைபெறவுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்