மெட்ரோ பயணிகளின் கவனத்திற்கு - பயன்பாட்டில் இருந்த பழைய பயண அட்டை இன்று முதல் செல்லாது
மற்ற பயணச்சீட்டு முறைகள் வழக்கம் போல் தொடரும் எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.;
சென்னை,
சென்னை மெட்ரோ ரெயில்களில் பயணிக்க சி.எம்.ஆர்.எல். பயண அட்டையுடன், 2023 ஆம் ஆண்டு முதல் தேசிய பொதுபோக்குவரத்து அட்டையான சிங்கார சென்னை அட்டை அறிமுகப்படுத்தப்பட்டது.
இரண்டையும் பயணிகள் பயன்படுத்தி வந்த நிலையில், இதுவரை பயன்பாட்டில் இருந்த பழைய பயண அட்டை இன்று முதல் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் முழுமையாக சிங்கார சென்னை அட்டைக்கு மாறுவதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சி.எம்.ஆர்.எல் அட்டைகளை மீண்டும் ரீசார்ஜ் செய்ய முடியாது என்பதால், அதில் இருப்பில் உள்ள பணத்தை என்.சி.எம்.சி. (NCMC) அட்டையில் மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம். மற்ற பயணச்சீட்டு முறைகள் வழக்கம் போல் தொடரும் என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.