விசாரணைக்கு சென்ற பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர்: திருச்சியில் பரபரப்பு

சுமார் 2 நிமிடம் பேசி அந்த பெண் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.;

Update:2025-08-02 07:55 IST

திருச்சி,

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு போலீஸ் நிலையத்துக்கு விசாரணைக்கு வருமாறு பெண் ஒருவரை சப்-இன்ஸ்பெக்டர் அழைத்துள்ளார். இந்த நிலையில் அவர் தன்னை உல்லாசத்துக்கு வருமாறு அழைத்ததாக கூறி, அந்த பெண் சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவில், போலீஸ் நிலையத்துக்கு சென்ற என்னிடம் புகார் சம்பந்தமாக சப்-இன்ஸ்பெக்டர் விசாரித்தார். பின்னர் என்னிடம், `நீ உனது கணவரை காதல் திருமணம் செய்து 3 குழந்தைகள் பெற்றுள்ளாய். நீ உயர்ந்த சாதி தானே, தாழ்ந்த சாதியை சேர்ந்தவனை திருமணம் செய்து பிள்ளையை பெற்றிருக்க, உனக்கு எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன். நீ எனது ஆசைக்கிணங்க வேண்டும். இல்லையென்றால் உன் மனுவை விசாரிக்காமல் நான் காலதாமதமாக அலைக்கழிப்பேன்' என்று கூறினார்.

இதையடுத்து நான் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்து நடந்தவற்றை வெளிமாநிலத்தில் லாரி ஓட்டி வரும் கணவரிடம் செல்போன் மூலம் தெரிவித்தேன் என்று கூறி உள்ளார். சப்-இன்ஸ்பெக்டரை குற்றம்சாட்டி சுமார் 2 நிமிடம் பேசி அந்த பெண் வெளியிட்ட வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருவது திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்