சட்டசபை தேர்தல்: திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது.;

Update:2025-08-02 13:23 IST

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ள நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது.

திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, பாமக, தவெக உள்பட பல்வேறு கட்சிகள் தற்போதே தேர்தல் நடவடிக்கைகளை தொடங்கி விட்டன.

அந்த வகையில், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது சிகிச்சைக்குப்பின் வீடு திரும்பியுள்ளார். அவர் தற்போது கட்சி, அரசு பணிகளை மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில், தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்தார். நிர்வாகிகளுடன் 1-1 உரையாடலில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டார். தொகுதி களநிலவரம், சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளுதல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 1-1 உரையாடலில் ஈடுபட்டார். 

Tags:    

மேலும் செய்திகள்