தூத்துக்குடி பனிமய மாதா ஆலயத்தில் எடப்பாடி பழனிசாமி வழிபாடு
எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.;
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தொகுதி வாரியாக, 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற சூறாவளி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் இன்று எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் தொழில் முனைவோர், விவசாயிகள், உப்பு உற்பத்தியாளர்கள், மீனவர்கள் மற்றும் வழக்கறிஞர்களோடு கலந்துரையாடினார். பின்னர் அவர் தூத்துக்குடியில் உள்ள பனிமய மாதா ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தார்.
இந்த நிகழ்வின்போது, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சண்முகநாதன், கடம்பூர் ராஜூ, சி.த. செல்லப்பாண்டியன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உடனிருந்தனர்.