கூலி இசை வெளியீட்டு விழா: போலீசாருடன் ரசிகர்கள் வாக்குவாதம்

ஏராளமான ரசிகர்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால், அரங்கத்திற்கு வெளியே காத்திருக்கிறார்கள்;

Update:2025-08-02 19:47 IST

சென்னை,

கூலி இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்க ரசிகர்கள் பலருக்கும் அனுமதி பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. அரங்கத்திற்குள் ரசிகர்கள் இசை வெளியீட்டு விழாவை ரசித்து வரும் நிலையில், ஏராளமான ரசிகர்கள் தங்களுக்கு அனுமதி அளிக்கப்படாததால், அரங்கத்திற்கு வெளியே காத்திருக்கிறார்கள். அரங்கம் நிறைந்துவிட்டது உள்ளே அனுமதிக்க முடியாது என்று போலீசார் கூறியதால், ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதையும் காண முடிந்தது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் காணப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்