தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்துள்ளது - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம்தான் என்று எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.;

Update:2025-08-02 21:50 IST

தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நடந்த பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது; .

அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களின் பெயரை மாற்றி திமுக செயல்படுத்தி வருகிறது. தினம் தினம் ஒரு திட்டத்திற்கு பெயரை வைத்து விளம்பரம் செய்கிறார்கள். மக்களை ஏமாற்றுகிறார்கள். உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் நடத்தப்படும் முகாம்களுக்கு அரசு பணத்தை ரூ.600 கோடியை செலவு செய்கிறார்கள்.

ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக, ஊர் ஊராக சென்று மக்களிடம் மனு வாங்குனீர்களே, அது என்னாச்சு?இந்தியாவிலேயே அதிகம் கடன் வாங்கிய மாநிலம் தமிழகம். 4 ஆண்டுகளில் 4 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளார்கள். இந்தாண்டு ஒரு லட்சம் கோடி கடன் வாங்கப் போகிறார்கள். தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீது கடன் சுமையை சுமத்திய அரசாங்கம் தேவையா? இந்தக் கடனை வரி போட்டு தான் வசூல் செய்வார்கள். திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கிறது. திமுக எம்பியும், எம்எல்ஏவும் மேடையிலேயே சண்டை போட்டு கொள்கிறார்கள்" இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்