முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் எம்.பி. சந்திப்பு

ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் எம்.பி. இன்று சந்தித்துள்ளார்.;

Update:2025-08-02 21:56 IST

சென்னை,

தி.மு.க.வைச் சேர்ந்த பி.வில்சன், ராஜாத்தி (கவிஞர் சல்மா) , எஸ்.ஆர்.சிவலிங்கம், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மற்றும் அதிமுகவைச் சேர்ந்த ஐ.எஸ் இன்பதுரை, ம.தனபால் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை ராஜ்ய சபா தேர்தலில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து மாநிலங்களவையில் புதிதாக தேர்வான எம்.பி.க்கள் பதவி ஏற்பு விழா கடந்த ஜூலை மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. அப்போது, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மேல்சபையின் எம்.பியாக, தமிழில் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு உறுதிமொழியும் எடுத்துக் கொண்டார்.

இதற்கிடையே, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன்பு தலை சுற்றல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், சிகிச்சைகள் முடிந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலமுடன் வீடு திரும்பினார். இந்நிலையில், சென்னை ஆழ்வார்ப்பேட்டை இல்லத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை கமல்ஹாசன் எம்.பி. இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின்போது துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்