சென்னையில் 70 பூங்காக்களில் புத்தகம் வாசிப்பதற்கான நூலகம் அமைக்க மாநகராட்சி திட்டம்
சிந்தாரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் சிறிய நூலகம் அமைக்கப்பட்டு உள்ளது.;
சென்னை,
பொதுமக்களிடையே வாசிப்பு திறனை ஊக்குவிக்கவும் மேம்படுத்தும் விதமாகவும் பூங்காக்களில் சிறிய நூலகம் அமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். முதல்கட்டமாக ராயபுரம் மண்டலத்திற்குட்பட்ட சென்னை சூளை ஏ.பி.சாலையில் உள்ள ராகவேந்திரா பூங்கா மற்றும் சிந்தாரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் சிறிய நூலகம் பொதுமக்களுக்காக அமைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், இந்த திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில் சென்னையில் உள்ள 70 பூங்காக்களில் புத்தகம் வாசிப்பதற்கான நூலகம் அமைக்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதற்கான நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.