பராமரிப்பு பணி: வருகிற 5-ம் தேதி சென்னையில் மின் தடை
பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.;
சென்னை,
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னையில் 05.08.2025 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
எழும்பூர்: குளக்கரை தெரு, நேரு ஜோதி நகர், கிருஸ்னதாஸ் சாலை, பூங்கா தெரு, சாஸ்திரி நகர், ஏகாங்கிபுரம் தெரு, சேமாத்தம்மன் காலனி, டீக்காகுளம், ஸ்ரான்ஸ் ரோடு, ஓட்டேரி ஒரு பகுதி, ஸ்டாரன்ஸ் கந்தசாமி கோவில் தெரு, குக்ஸ் சாலை, ஹைதர் கார்டன் , ஈடன் கார்டன் தெரு, சோமசுந்தர நகர், பழைய வாழைமாநகர், கே.எச் சாலை, அன்டர்சன் தெரு, மேடவாக்கம் தெரு, டிரஸ்ட் ஸ்கொயர், விபி காலனி, சின்ன பாபு தெரு, ஒத்தவாடை தெரு, சி.ஆர் கார்டன் தெரு, ராமானுஜ கார்டன் தெரு, டோபிகானா தெரு, அருணாச்சலம் தெரு, படவட்டம்மன் கோயில் தெரு, செங்கற் சூளை தெரு, திருவிக தெரு, காமராஜ் தெரு, எஸ். எஸ்.புரம், புது மாணிக்கம் தெரு, வெங்கடரத்தினம் தெரு, செல்லப்பா தெரு, எஸ்டார்ன்ஸ் ரோடு, நாராயண முதலி தெரு அனுமந்தராயன் தெரு, வள்ளுவன் தெரு, சுப்புராயன் பிரதான சாலை, நல்லப்ப நாயக்கன் தெரு, சின்ன பாபு தெரு, பாஸ்யம் ரெட்டி 1 மற்றும் 2வது தெரு, சுப்பராயன் தெரு, சந்தியப்பன் தெரு, குக்ஸ் சாலை பகுதி, புதிய ப்ரான்ஸ் சாலை, சோலையம்மன் திரு.வி.கா தெரு.பொன்னியம்மன் தெரு.பொன்னன் தெரு, செல்லப்பா தெரு.
சோழிங்கநல்லூர் பகுதி: சித்தாலப்பாக்கம் ஜெயா நகர், வள்ளுவர் நகர், மாம்பாக்கம் பிரதான சாலை, டிவி நகர், மகேஸ்வரி நகர், டிஎன்எச்பி காலனி, பிரியா தர்ஷினி நகர், ஒட்டியம்பாக்கம் பிரதான சாலை, மாடம்பாக்கம், கோவிலஞ்சேரி மாம்பாக்கம் பிரதான சாலை, அகரம் பிரதான சாலை, நூத்தஞ்சேரி , மகிழ்ச்சி நகர், பாலா கார்டன், தெற்கு மடம், காந்திநகர்.
கோடம்பாக்கம்: டிரஸ்ட் புரம், ஆற்காடு சாலை பவர் ஹவுஸ் முதல் ரயில்வே டிராக் வரை, இன்பராஜபுரம், வன்னியர் தெரு, பஜனை கோயில் தெரு, வரதராஜப்பேட்டை மெயின் ரோடு, காமராஜர் நகர் முழுப் பகுதி, ரங்கராஜபுரம் பகுதி, பரகுசாபுரம், அஜிஸ் நகர், அத்ரேயபுரம், ஆண்டவர் நகர் பகுதி1, அண்ணா நெடும் பாதை , சர்குலர் ரோடு, சவுராஸ்த்ரா நகர், சங்கராபுரம், சூளைமேடு, கில் நகர், வி.ஓ.சி 1 முதல் 5வது தெரு, துரைசாமி சாலை, சுப்புராயன் தெரு, காமராஜர் காலனி 1 முதல் 8வது தெரு, அழகிரிநகர் மெயின் ரோடு, கங்கை அம்மன் கோயில் தெரு, பெரியார் பாதை, பத்மநாபன் நகர், தமிழர் வீதி, வள்ளலார் தெரு, இளங்கோவடிகள் தெரு, எத்திராஜ் தெரு, ஐயப்பா நகர் , 100 அடி சாலை.
சேத்பட்: புஷ்பா நகர் குடிசை மாற்று வாரியம் ஒரு பகுதி, வள்ளுவர் குடியிருப்பு, குளக்கரை சாலை, ரோடு. கோத்தாரி ரோடு, ஜெயலட்சுமிபுரம் பிரதான சாலை, சீத்தா நகர் ஒரு பகுதி. மேற்கு மற்றும் தெற்கு மாட வீதி, ஜம்புலிங்கம் தெரு, கிருஷ்ண ஐயர் தெரு, வீதி, ஸ்டெர்லிங் ரோடு, வள்ளுவர் கோட்டம் நெடுஞ்சாலை, மாநகராட்சி பள்ளி சாலை, லேக் ஏரியா, காமராஜபுரம் சரோஜி தெரு, விஜயலட்சுமி தெரு, சரஸ்வதி விரிவு, புரௌன் ஸ்டோன் அடுக்குமாடி குடியிருப்பு, மகாலிங்கபுரம் பிரதான சாலை மற்றும் தெரு, லேடி மாதவன் சாலை, சர் மாதவன் நாயர் சாலை, பாலட் மாதவன் சாலை, நாச்சியப்பன் தெரு, வைகுண்டபுரம் சாலை, இலயோலா கல்லூரி, ராம நாய்க்கன் தெரு , கிருஷ்ணம்மாள் ரோடு, மேல்பாடி சாலை, புது தெரு, மாங்காடு சாமி தெரு, ஜெகநாதன் தெரு, குமரப்பா தெரு.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.