தூத்துக்குடி சிவன் கோவிலில் துர்க்கை அம்பிகை வருஷாபிஷேக விழா

தூத்துக்குடி சிவன் கோவிலில் உள்ள துர்க்கை அம்பிகைக்கு 54வது ஆண்டு விழா நடைபெற்றது.;

Update:2025-08-02 14:01 IST

தூத்துக்குடியில் சிவன் கோவில் என்று அழைக்கப்படும் பாகம்பிரியாள் உடனுறை சங்கரராமேஸ்வரர் கோவிலில் உள்ள துர்க்கை அம்பிகைக்கு 54வது ஆண்டு விழா நடைபெற்றது.

இதையொட்டி நேற்று முன்தினம் இரவு ஊஞ்சல் உற்சவம் தீப பூஜை நடைபெற்றது. நேற்று காலை விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசனம், கும்பபூஜை, துர்க்கா ஸூக்தம் ஜெபம், மற்றும் காலை அபிஷேகம், கும்பாபிஷேகம், நடைபெற்றது. விழாவில் கோவில் அறங்காவலர் குழு தலைவர்கள் கந்தசாமி, செந்தில்குமார், அறங்காவலர்கள் பிஎஸ்கே ஆறுமுகம், ஜெயலட்சுமி, நடராஜன் உட்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பூஜைகளை சிவன் கோவில் பிரதான பட்டர்கள் செல்வம், சுப்பிரமணியன் ஆகியோர் நடத்தினர். விழா ஏற்பாடுகளை சிவன் கோவில் செயல் அலுவலர் தமிழ்ச்செல்வி, ஜலதுர்க்கா வார வழிபாடு அமைப்பாளர் ஜெயராணி, செயலாளர் பெத்தனாட்சி, பொருளாளர் விஜயா மற்றும் நிர்வாகிகள் அனுராதா, சாரதா, பொன்னி, சுமதி, ராஜபுஷ்பம் உள்ளிட்டோர் செய்திருந்தனர். இந்த விழாவில் பெண்கள் திரளானோர் பங்கேற்று துர்க்கை அம்பிகையை வழிபட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்