மாதாந்திர பராமரிப்பு பணி: திருநெல்வேலியில் நாளை மறுநாள் மின்தடை

திருநெல்வேலி கிராமப்புற கோட்டத்தில் தாழையூத்து மற்றும் சீதபற்பநல்லூர் துணைமின் நிலையங்களில் நாளை மறுநாள் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.;

Update:2025-08-02 15:49 IST

திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் குத்தாலிங்கம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தாழையூத்து மற்றும் சீதபற்பநல்லூர் உபமின் நிலையங்களில் நாளை மறுநாள் (4.8.2025, திங்கள்கிழமை) மாதாந்திர அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை பாதுகாப்பு கருதி பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்படும்.

அதன்படி மானூர் வட்டாரம், தாழையூத்து, சேதுராயன்புதூர், ராஜவல்லிபுரம், ரஸ்தா, தச்சநல்லூர், தென்கலம்புதூர், நாஞ்சான்குளம், தென்கலம், மதவகுறிச்சி, புதூர், சீதபற்பநல்லூர், உகந்தான்பட்டி, சுப்பிரமணியபுரம், சமத்துவபுரம், சிறுக்கன்குறிச்சி, காங்கேயன்குளம், வல்லவன்கோட்டை, வெள்ளாளங்குளம், முத்தன்குளம், மாறாந்தை, கல்லத்திகுளம், நாலான்குறிச்சி, கீழகரும்புளியூத்து மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நாளை மறுநாள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்