கோவை-போத்தனூர் ரெயில் சேவையில் மாற்றம்

ரெயில் தண்டவாளம் மாற்றும் பணிகள் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.;

Update:2025-08-02 13:55 IST

கோவை,

கோவை மாவட்டம் போத்தனூர் ரெயில்வே யார்டு பகுதியில் ரெயில் தண்டவாளம் மாற்றும் பணிகள் இன்று (சனிக்கிழமை) நடைபெற உள்ளதால் காலை 6 மணிக்கு கன்னூரிலிருந்து கோவைக்கு இயக்கப்படு்ம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16607) பாலக்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

அதேபோல் மேட்டுப்பாளையத்தில் இருந்து மதியம் 1.05 மணிக்கு இயக்கப்படும் மெமு ரெயில் (வண்டி எண் 66615) கோவை வரை மட்டுமே இயக்கப்படும். மதியம் 2.30 மணிக்கு கோவை-மதுரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண் 16721) கோவைக்கு பதிலாக பொள்ளாச்சியிலிருந்து மாலை 3.30 மணிக்கு புறப்படும்.

போத்தனூரிலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பிற்பகல் 1.30 மணிக்கு இயக்கப்படும் ரெயில் (வண்டி எண் 66616) போத்தனூருக்கு பதிலாக கோவை சந்திப்பிலிருந்து 3.45 மணிக்கு புறப்படும். இந்த தகவலை தென்னக ரெயில்வேயின் சேலம் கோட்ட மக்கள் தொடர்பு அதிகாரி மரியா மைக்கேல் தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்