'' நாடாளுமன்றத்தில் இதுதான் எனது போக்கஸ்'' - கமல்ஹாசன் எம்.பி

ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள் அல்ல சமுதாய அமைப்பு என்று கமல்ஹாசன் கூறினார்.;

Update:2025-08-02 08:57 IST

சென்னை,

நாடாளுமன்ற உறுப்பினராக பதவி ஏற்று கூட்டத்தொடரில் கலந்து கொண்ட பின் கமல்ஹாசன் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆணவக் கொலைகளுக்கு காரணம் கட்சிகள் அல்ல சமுதாய அமைப்பு என்று கூறினார்.

அவர் கூறுகையில், "வெளியில் இருந்து கூர்மையாக எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்த இடத்தை உள்ளே இருந்து பார்க்கிறேன். அதில் உள்ள கடமை புரிகிறது. பெருமை புரிகிறது. ஆற்ற வேண்டிய கடமைகள் என்ன என்று புரிகிறது. என்னுடைய முனைப்பு முதலில் நாடு, தமிழ்நாடு. இதுவே நாடாளுமன்றத்தில் எனது போக்கஸ். இதற்காகத்தான் போய் இருக்கிறேன்.

இது முக்கியமான பொறுப்பு என்று நான் நினைக்கிறேன். சரிவர என் கடமையை செய்வேன் என நினைக்கிறேன். ஆணவக் கொலைகள் சுதந்திரம் வாங்குவதற்கு முன்னால் இருந்தே நடந்து வருகிறது. நம்முடைய சமுதாய அமைப்பு அப்படி. அதை மாற்ற வேண்டும். கட்சிகள் வரும் போகும் நாடு நடந்தே இருக்கும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்