தூத்துக்குடியில் உலக தாய்ப்பால் வார விழா: அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்
ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.;
ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செவிலியர் கல்லூரி வளாகத்தில் உலக தாய்ப்பால் வார விழாவை சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் நேற்று தொடங்கி வைத்து தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை அனைவருக்கும் தெரிவிக்கும் வகையில் தாய்ப்பால் விழிப்புணர்வு பாடலை வெளியிட்டார். மேலும் அவர் இந்த விழிப்புணர்வு பாடல் காட்சிப்படுத்தப்பட்ட வாகனத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் சமூக நலத்துறை அரசு செயலர் ஜெயஸ்ரீ முரளீதரன் விழா பேருரை நிகழ்த்தினார். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் இயக்குனர் மெர்சி ரம்யா விழாவின் சிறப்பு குறித்து பேசினார். இந்த விழாவில் சமூக நலத்துறை ஆணையர் சங்கீதா, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் சிவக்குமார், துணை முதல்வர் கலைவாணி, உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெயமணி, உதவி உறைவிட மருத்துவர் பெபின் கார்ட்டெக்ஸ், குழந்தைகள் நலப்பிரிவு இணைப் பேராசிரியர் கவிதா, தூத்துக்குடி மாநகராட்சி கமிஷனர் பானோத் ம்ருகேந்தர் லால், கோட்டாட்சியர் பிரபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.