நாமக்கல்: கார் பழுது நீக்கும் நிலைய தீ விபத்தில் 7 கார்கள், 2 பைக்குகள் சேதம்

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் கோபால் என்பவருக்குச் சொந்தமான கார் பழுது நீக்கும் நிலையம் உள்ளது.;

Update:2025-08-02 10:37 IST

நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் கோபால் என்பவருக்குச் சொந்தமான கார் பழுது நீக்கும் நிலையம் உள்ளது. அந்த பழுது நீக்கும் நிலையத்தில் இன்று அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த கோபால் தனது கடைக்குச் சென்று பார்த்தார். அங்கு தீ மளமளவென எரிந்து கொண்டிருந்தது. உடனே அவர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயணைப்பு வாகனத்திலுள்ள தண்ணீரை பீறிட்டு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் கடைக்குள் சென்று பார்த்தபோது தீ விபத்தில் அங்கிருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 7 கார்கள் மற்றும் 2 பைக்குகள் எரிந்து சேதமடைந்து இருந்தது. இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிந்து தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்