சென்னை திருவேற்காட்டில் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் வெட்டிக்கொலை - மர்ம நபர்கள் வெறிச்செயல்
மர்ம நபர்கள் சிலர் சிவக்குமாரை பின்தொடர்ந்து சென்று, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.;
சென்னை,
சென்னை திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சிவக்குமார். இன்று மாலை தனது குழந்தைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருவதற்காக சிவக்குமார் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் மர்ம நபர்கள் சிலர் சிவக்குமாரை பின்தொடர்ந்து சென்று, அவரை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதில் படுகாயமடைந்த சிவக்குமார், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிவக்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட சிவக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த நிலையில், பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நிகழ்ந்ததா? என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.