மாமல்லபுரத்தில் 9-ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம்
மாமல்லபுரத்தில் 9-ம் தேதி பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார்.;
சென்னை,
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகனும் பா.ம.க. தலைவருமான டாக்டர் அன்புமணி ராமதாசுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கட்சியில் முழு அதிகாரம் தனக்கே உள்ளது என்று இருவரும் கூறி வருகின்றனர். அதுமட்டுமின்றி கட்சியில் தங்களது பலத்தை நிரூபிக்க இருவரும் போட்டி கூட்டத்தையும் நடத்துகிறார்கள். அதுமட்டுமின்றி இருவரும் மாறி மாறி ஒருவரையொருவர் பகிரங்கமாக குற்றம் சாட்டுவது மோதலின் உச்சத்தை காட்டுகிறது.
இந்த நிலையில், பாமக பொதுக்குழுக் கூட்டம் மாமல்லபுரத்தில் வருகிற 9-ம் தேதி நடைபெறும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ், பொதுச்செயலாளர் வடிவேல் இராவணன் கூட்டாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
"பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் வரும் 09.08.2025 (சனிக்கிழமை) காலை 11.00 மணிக்கு மாமல்லபுரத்தில் உள்ள கான்ளுயன்ஸ் (Confluence) அரங்கில் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வருகிற 17-ம் தேதி சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெற உள்ளதாக பாமக நிறுவனர் ராமதாஸ் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.