தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் - முழு விவரம்
துணைமின்நிலையங்களில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.;
சென்னை,
திருச்சி:-
ஸ்ரீரங்கம் கோட்டம், சமயபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதையொட்டி சமயபுரம், மண்ணச்சநல்லூர் ரோடு, வெங்கங்குடி, வ.உ.சி. நகர், பூங்கா, எழில்நகர், காருண்யாசிட்டி, மண்ணச்சநல்லூர், இருங்களூர், கல்பாளையம், கொணலை, மேலசீதேவிமங்கலம், புறத்தாக்குடி, ச.புதூர், வலையூர், கரியமாணிக்கம், பாலையூர், தெற்கு எதுமலை, கன்னியாக்குடி,
ஸ்ரீபெரும்புதூர், மருதூர், மாடக்குடி, வைப்பூர், சங்கர்நகர், கூத்தூர், நொச்சியம், பளூர், பாச்சூர், திருவாசி, பனமங்கலம், குமரக்குடி, அழகியமணவாளம், அத்தாணி, திருவரங்கபட்டி, கோவத்தக்குடி, மான்பிடிமங்கலம், சாலப்பட்டி, எடையபட்டி, அய்யம்பாளையம், ராசாம்பாளையம், தத்தமங்கலம், தழுதாளப்பட்டி, சிறுகுடி, வீராணி, சிறுப்பத்தூர், தேவிமங்கலம், அக்கரைப்பட்டி, வங்காரம் மற்றும் ஆய்க்குடி ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மான கழக ஸ்ரீரங்கம் செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்துள்ளார்.
மதுரை:-
மதுரை கோ.புதூர் துணைமின்நிலையத்தில் நாளை(சனிக்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான பாரதி உலா ரோடு, ஜவஹர் ரோடு, பெசன்ட் ரோடு, அண்ணாநகர் சொக்கிகுளம், வல்லபாய் ரோடு, புல்லபாய் தேசாய் ரோடு, ரேஸ்கோர்ஸ் ரோடு, கோகலே ரோட்டின் ஒரு பகுதி, ராமமூர்த்தி ரோடு, லஜபதிராய் ரோடு, சப்பாணி கோவில் தெரு, பழைய அக்ரஹாரம் தெரு, எல்.டி.சி. ரோட்டின் ஒரு பகுதி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், வருங்கால வைப்புநிதி குடியிருப்பு, ஏ.ஐ.ஆர். குடியிருப்பு, நியூ டி.ஆர்.ஓ. காலனி, சிவசக்தி நகர், பாத்திமா நகர், புதூர் வண்டிப்பாதை மெயின்ரோடு, கஸ்டம்ஸ் காலனி, நியூ நத்தம் ரோடு ஈ.பி. குவார்ட்ஸ் முதல் கண்ணா ஆஸ்பத்திரி அருகில் வரை, ரிசர்வ் லைன் குடியிருப்பு, ரேஸ்கோர்ஸ் காலனியின் ஒரு பகுதி, கலெக்டர் பங்களா,
ஜவஹர்புரம், திருவள்ளுவர் நகர், அழகர்கோவில் ரோடு, ஐ.டி.ஐ. பஸ் நிறுத்தம் முதல் தல்லாகுளம் பெருமாள் கோவில் வரை, டீன் குவார்ட்ஸ், காமராஜர் நகர் 1 முதல் 4 வரை, ஹச்சகாண் ரோடு, கமலா 1, 2 தெரு, சித்தரஞ்சன் வீதி, வெங்கட்ராமன் வீதி, சரோஜினி தெரு, லட்சுமி சுந்தரம் மகால், பொதுப்பணித்துறை அலுவலகம், கண்மாய் மேலத்தெரு, தல்லாகுளம் மூக்கபிள்ளை தெரு, ஆத்திகுளம், குறிஞ்சி நகர், கனகவேல் நகர், பழனிச்சாமி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஜெயராமன் கூறினார்.
தென்காசி:-
நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை, "தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தளம்பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம், செங்கோட்டை, கணக்கப்பிள்ளைவலசை, பெரியபிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்குமேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு, சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக்குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம், சாம்பவர்வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, எம்.சி.பொய்கை, துரைச்சாமிபுரம்.
பெருமாள்பட்டி, மாங்குடி, இனாம்கோவில்பட்டி, அருகன்குளம்புதூர், செந்தட்டியாபுரம். எட்டிச்சேரி, தென்மலை, அ.சுப்பிரமணியாபுரம், இடையன்குளம், முறம்பு, ஆசிலாபுரம். பருவக்குடி, படர்ந்தபுளி, பி.ரெட்டியார்பட்டி, தெற்கு வெங்காநல்லுார், சோலைச்சேரி, வேலாயுதபுரம், புளியங்குடி, சிந்தாமணி, அய்யாபுரம், ராஜகோபாலபேரி, ரத்தினபுரி, இந்திரா நகர், புன்னையாபுரம், காடுவெட்டி, சிங்கிலிபட்டி, சங்கனாப்பேரி, சிதம்பரபேரி, சுந்தரேசபுரம், திருவேட்டநல்லூர், சொக்கம்பட்டி, திரிகூடபுரம், மேல புளியங்குடி, முள்ளிகுளம், தலைவன்கோட்டை, துரைசாமியாபுரம், நகரம், மலையடிகுறிச்சி, மற்றும் வெள்ள கவுண்டன்பட்டி.
ஊத்துமலை, கீழக்கலங்கல், குறிஞ்சான்குளம், மேல மருதப்பப்புரம், சோலைசேரி, கருவந்தா, அமுதாபுரம், மாவிலியூத்து, கல்லத்திக்குளம், கங்கணாங்கிணறு, ருக்குமணியம்மாள்புரம், ஆலங்குளம், ஆண்டிபட்டி, நல்லூர், சிவலார்குளம், ஐந்தான்கட்டளை, துத்திக்குளம், கல்லூத்து, குருவன்கோட்டை, குறிப்பன்குளம், அத்தியூத்து, குத்தபாஞ்சான், மாயமான்குறிச்சி, கழுநீர்குளம், அடைக்கலப்பட்டினம், பூலாங்குளம், முத்துகிருஷ்ணபேரி, கடையம், கட்டேரிபட்டி, முதலியார்பட்டி, பண்டாரகுளம், பொட்டல்புதூர், திருமலையப்புரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடானூர், மாதாபுரம், மைலப்பபுரம், வெய்காலிப்பட்டி, மேட்டூர்.
நெல்லை:-
நாளை (சனிக்கிழமை), "நெல்லை சந்திப்பு, கொக்கிரகுளம், மீனாட்சிபுரம், வடக்கு மற்றும் தெற்கு புறவழிச் சாலை, வண்ணார்பேட்டை, இளங்கோ நகர், பரணி நகர், நெல்லை சந்திப்பு முதல் மேரி சார்ஜன்ட் பள்ளி வரையிலான திருவனந்தபுரம் சாலை, பாளையங்கோட்டை புதுப்பேட்டை தெரு, சுப்பிரமணியபுரம் மற்றும் மாருதி நகர்.
ஆழ்வான்துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், பாப்பாக்குடி, கபாலிபாறை, இடைகால், அணைந்த நாடார்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக்குத்தப்பாஞ்சான், காசிதர்மம், முக்கூடல், சிங்கம்பாறை, கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூர், சாட்டுபத்து, அரிகேசவநல்லூர், வெள்ளாங்குளி ரெங்கசமுத்திரம், கூனியூர், காருகுறிச்சி, அம்பை, ஊர்க்காடு, வாகைகுளம், இடைகால், மன்னார்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியர்பட்டி, மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகர், தெற்குபாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூர், ஏர்மாள்புரம், பணகுடி, லெப்பைகுடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தபனை, கடம்பன்குளம்.
திருப்பூர்:-
வீரபாண்டி, சி.ஜி.புதூர், ஆண்டிபாளையம் ஆகிய துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி வீரபாண்டி, பாலாஜி நகர், முருகம்பாளையம், சுண்டமேடு, பாரதிநகர், நொச்சிபாளையம், குளத்துப்பாளையம், கரைபுதூர், குப்பாண்டம்பாளையம், ஆ.யு.நகர், லட்சுமிநகர், சின்னக்கரை, இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், முத்து நகர், சின்னாண்டிபாளையம் கிழக்கு பகுதி, ராஜகணபதி நகர், இடுவாய் கிழக்கு பகுதி, ஜீவா நகர், சின்னியகவுண்டன்புதூர், முல்லை நகர், இடும்பன் நகர், சு.மு.காட்டன் ரோடு, காமாட்சி நகர், செல்லம் நகர், வஞ்சிப்பாளையம், மகாலட்சுமி நகர், அம்மன் நகர், தாந்தோணியம்மன் நகர், எவர்கிரீன் அவென்யூ, ஸ்ரீநிதி கார்டன், தனலட்சுமி நகர், லிட்டில் பிளவர் நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருப்பூர் மின்வாரிய செயற்பொறியாளர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.
இதேபோல் அவினாசி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதையொட்டி அவினாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துசெட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, வ.உ.சி.காலனி, கிழக்கு, மேற்கு, வடக்கு ரத வீதிகள், அவினாசி கைகாட்டிபுதூர், ராயம்பாளையம், சக்திநகர், எஸ்.பி.அப்பேரல், குமரன் காலனி, ராக்கியாபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்வினியோகம் நிறுத்தப்படுகிறது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
விழுப்புரம்:-
மேல்மலையனூர் அடுத்த அவலூர்பேட்டையில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை அவலூர்பேட்டை, ரவணாம்பட்டு, வடுகப்பூண்டி, பறையம்பட்டு, கொடம்பாடி, கோட்டப்பூண்டி, கப்ளாம்பாடி, கோவில்புறையூர், நொச்சலூர், ஆதிகான் புரவடை, மேக்களூர், செவரப்பூண்டி, கீக்களூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை செஞ்சி மின்வாரிய செயற்பொறியாளர் சிவசங்கரன் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை:-
திருவண்ணாமலை தாலுகா மங்கலம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 வரை மங்கலம், மாதலம்பாடி, ஐங்குணம், நூக்காம்பாடி, ஆர்ப்பாக்கம், வேடந்தவாடி, கொத்தந்தவாடி, எரும்பூண்டி, பொய்யானந்தல், ராமநாதபுரம் ஆகிய கிராமங்களிலும், மன்சுராபாத் துணை மின் நிலையங்களை சேர்ந்த வி.பி.குப்பம், அலங்காரமங்கலம், பூதமங்கலம், பாடகம் ஆகிய கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்படும்.
அதேபோல் அவலூர்பேட்டை துணை மின் நிலையங்களை சார்ந்த அவலூர்பேட்டை, வடுங்காம்பூண்டி, கோவில்புரயூர், கப்ளாம்பாடி ஆகிய கிராமங்களிலும் மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இந்த தகவலை திருவண்ணாமலை மின்வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விருதுநகர்:-
ராஜபாளையம் கோட்டத்தில் அமைந்துள்ள ஆர். ரெட்டியபட்டி துணை மின் நிலையம் மற்றும் சேத்தூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது.
ஆதலால் சத்திரப்பட்டி, அய்யனாபுரம், சங்கரபாண்டியாபுரம், சங்கம்பட்டி, திருவேங்கடபுரம், ராமச்சந்திராபுரம், கீழராஜகுலராமன், குறிச்சியார்பட்டி, பேயம்பட்டி, கன்னிதேவன்பட்டி, நைனாபுரம், வடமலையாபுரம், அழகாபுரி, ஆப்பனூர், அட்டை மில் முக்குரோடு ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம். இருக்காது.
அதேபோல சேத்தூர், தேவதானம், கோவிலூர், சொக்கநாதன்புத்தூர், சோலைசேரி, கிருஷ்ணாபுரம், புத்தூர், சுந்தரராஜபுரம், புனல்வேலி ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை செய்யப்படுகிறது. அதேபோல மீனாட்சிபுரம், ஜமீன் கொல்லங்கொண்டான், செட்டியார்பட்டி, தளவாய்புரம், முகவூர், நல்லமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வினியோகம் இருக்காது. மேற்கண்ட தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் முத்துராஜ் கூறினார்.
புதுக்கோட்டை:-
கறம்பக்குடி, ரெகுநாதாரம், நெடுவாசல் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. எனவே இங்கிருந்து மின் வினியோகம் பெறும், கறம்பக்குடி நகர், தீத்தான்விடுதி, குளந்திரான்பட்டு, கரம்பவிடுதி, பிலாவிடுதி, அம்புக்கோவில், மைலன்கோன் பட்டி, மருதன் கோன் விடுதி, வாண்டான் விடுதி, பந்துவக்கோட்டை, கே.கே.பட்டி, ரெகுநாதபுரம், புதுவிடுதி, தட்டா மனைப்பட்டி, முதலிப்பட்டி, கீராத்தூர், கிளாங்காடு, செங்கமேடு, பல்லவராயன் பத்தை, முள்ளங்குறிச்சி, திருமணஞ்சேரி, மஞ்சுவிடுதி, பட்டத்திக்காடு, கருக்காகுறிச்சி, குரும்பிவயல், திருமுருகப்பட்டினம், நெடுவாசல், திருவோணம், நெய்வேலி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று கறம்பக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் குமாரவேல் தெரிவித்துள்ளார்.
வேலூர்:-
வேலூர் மின்பகிர்மான வட்டத்தை சேர்ந்த சாத்துமதுரை, கீழ்பள்ளிப்பட்டு ஆகிய துணை மின்நிலையங்களில் மின்பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சாத்துமதுரை, சாத்துப்பாளையம், சப்தலிபுரம், அல்லிவரம், நெல்வாய், குளவிமேடு, நாயக்கனேரி, துத்திப்பட்டு, கட்டுப்படி, அடுக்கம்பாறை, ஆற்காட்டான்குடிசை, மூஞ்சூர்பட்டு, நாகநதி, ஜார்தான்கொல்லை, துத்திக்காடு, பங்களத்தான், பாலாத்துவண்ணான், கனிகனியான், புதூர்,
சோழவரம், கணியம்பாடி, பாலம்பாக்கம், கீழ்பள்ளிப்பட்டு, சாம்கோ, வல்லம், வரகூர், கொங்கராம்பட்டு, மேல்வல்லம், கீழ்அரசம்பட்டு, கத்தாழம்பட்டு, நஞ்சுகொண்டாபுரம், அமிர்தி, காட்டுக்கானூர், மேட்டுகுடிசை, நீப்பலாம்பட்டு, சாத்தம்பட்டு, மோத்தக்கல், மோட்டுபாளையம், கம்மவான்பேட்டை, கம்மசமுத்திரம், சலமநத்தம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும். இந்த தகவலை வேலூர் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.ஆரோக்கிய அற்புதராஜ் தெரிவித்துள்ளார்.
திருப்பத்துர்:-
திருப்பத்துர் மின் பகிர்மான வட்டத்தில் திருப்பத்துர் கோட்டத்தை சேர்ந்த திருப்பத்தூர், கந்திலி, குரிசிலாப்பட்டு, புதூர்நாடு, வெலக்கல்நத்தம் ஆகிய துணை மின் நிலையங்களில் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளது.
எனவே நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சி.கே.ஆசிரமம், பொம்மிகுப்பம், திருப்பத்தூர் டவுன், ஹவுசிங் போர்டு, குரிசிலாப்பட்டு, மடவாளம், மாடபள்ளி, சவுந்தம்பள்ளி, தாதனவலசை, வெங்களாபுரம், ஆதியூர், மொளகரம்பட்டி, கந்திலி, வேப்பல்நத்தம், நந்திபெண்டா, கொத்தாலக்கொட்டாய், புத்தகரம், பாரண்டபள்ளி, மண்டலநாயனகுண்டா, தோக்கியம், தாலுகா அலுவலகம், ரெயில்வே ஸ்டேசன் ரோடு, பஸ்நிலையம், ஆரிப்நகர், கோட்டை தெரு, ஆசிரியர் நகர், திரியாலம், பாச்சல், அச்சமங்கலம்,
கருப்பனுர், மூலக்காடு, கரம்பூர், ராஜபாளையம், பெருமாபட்டு, சின்னசமுத்திரம், பள்ளத்தூர், ஜலகாம்பாறை, பள்ளவள்ளி, கூடப்பட்டு, சிங்கம்பாளையம், புதுர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல் நாடு, ஜெயபுரம். சந்திரபுரம், வேப்பல்நத்தம், பைனப்பள்ளி, வெலக்கல்நத்தம், குனிச்சூர், முகமதாபுரம், செட்டேரிடேம், சுண்ணாம்புகுட்டை, மல்லப்பள்ளி, ஏரியூர், அன்னசாகரம் ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்படும். மேற்கண்ட தகவலை திருப்பத்தூர் மின் வாரிய செயற்பொறியாளர் சம்பத் தெரிவித்துள்ளார்.