ராமேஸ்வரம் மீனவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்த இலங்கை

ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை நிபந்தனைகளுடன் இலங்கை மன்னார் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது.;

Update:2025-08-14 12:44 IST

கோப்புப்படம் 

சென்னை,

தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் சிறைபிடிக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. மீனவர்கள் கைது செய்யப்படுவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையிலும், இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் முடிந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து வருகின்றனர். கடந்த 55 நாட்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம், வவுனியா சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இந்த நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேரை தலா ரூ.1.75 லட்சம் அபராதம் விதித்து நிபந்தனைகளுடன் இலங்கை மன்னார் கோர்ட்டு விடுதலை செய்துள்ளது. மேலும் அபராதத்தை கட்டத் தவறினால் ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்