திருநெல்வேலி: கலெக்டர் தேசிய கொடியை ஏற்றினார்; போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
திருநெல்வேலியில் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் 79வது சுதந்திர தின விழா காவல்துறை அணிவகுப்பு மரியாதையுடன் நடைபெற்றது.;
நாடு முழுவதும் நேற்று 79வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு திருநெல்வேலியில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் வைத்து சுதந்திர தின விழா நடைபெற்றது. இந்த விழாவில் திருநெல்வேலி மாவட்ட கலெக்டர் சுகுமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, பயிற்சி டி.எஸ்.பி. சதீஷ்கண்ணன் முன்னிலை வகித்து வழிநடத்தி வந்த காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பான முறையில் பணிபுரிந்த காவல்துறையினர், அமைச்சு பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் உட்பட 32 பேருக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட கலெக்டர் வழங்கினார்.
இந்த சுதந்திர தின விழாவில் திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி, திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் வினோத் சாந்தாராம், விஜயகுமார் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.