50க்கும் மேற்பட்ட பெண்களுடன் காரில் உல்லாசம்... நகைகளையும் பறித்த 24 வயது வாலிபர் குறித்து திடுக்கிடும் தகவல்

வேலைக்கு செல்லும் பெண்களையும் தனியாக வீட்டில் இருக்கும் பெண்களையும் குறிவைத்து காரில் அழைத்து சென்று அவர்களை பலாத்காரம் செய்துவிடுவாராம்.;

Update:2025-08-14 16:59 IST

சென்னை,

கேரள மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் சஜு (வயது 24) என்ற விச்சு. இவர் திண்டுக்கல் நாகல் நகர் பகுதியில் கட்டிட வேலைக்காக நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை தனது வீட்டு வேலைக்காக காரில் அழைத்து சென்றார். பின்னர் ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதி வந்ததும் அந்த பெண் அணிருந்த நகைகளை பறித்துக்கொண்டு பின்னர் தனது ஆசைக்கு இணங்கும்படி வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்தார்.

பின்னர் அதனை தனது செல்போனில் பதிவு செய்து வைத்துகொண்டார். இதனிடையே பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் அந்த வாலிபரை திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். போலீசார் விசாரணையில் அந்த வாலிபர் கேரளாவில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அங்கு சென்றனர். அப்போது சஜு அர்நாடகாவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது, இதனையடுத்து போலீசார் அவரது நடவடிக்கைகளை கண்காணித்து மீண்டும் கேரளாவுக்கு வந்து கொண்டு இருந்தபோது கைது செய்தனர்.

போலீசார் சஜுவை கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். அவர் வைத்திருந்த செல்போனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அந்த செல்போன்களில் 50க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் பதிவாகி இருந்தது.

இது குறித்து அவரிடம் விசாரித்தபோது வேலைக்கு செல்லும் பெண்களையும் தனியாக வீட்டில் இருக்கும் பெண்களையும் குறிவைத்து காரில் அழைத்து சென்று பின்னர் அவர்களை தனது இச்சைக்கு இணங்க வைத்து பலாத்காரம் செய்து விடுவதாகவும் அதனை வீடியோவாக பதிவு செய்து வைத்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

பின்னர் அதே வீடியோவை காட்டி அந்த பெண்களிடம் மீண்டும் பாலியல் வன்கொடும் செய்து வந்துள்ளார். அவர்கள் அணிந்திருக்கும் நகைகளை பறித்துக்கொண்டு தன் மீது ஏதேனும் புகார் தெரிவித்தால் இந்த வீடியோவை குடும்பத்தினருக்கும், சமூக வலைதளங்களிலும் வெளியிட்டு விடுவதாக மிரட்டி உள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் தெரிவிக்காமல் இருந்துவந்துள்ளனர். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களுக்கு சென்று பெண்களை பலாத்காரம் செய்து அவர்களிடம் நகை பறிப்பிலும் ஈடுபட்டு உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்து உள்ளார். தன் வசதிக்காக வெவ்வேறு சிம்கார்டுகள் மூலம் பல செல்போன்கள் பயன்படுத்தி வந்துள்ளார்.

கைதான சஜு தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை சரளமாக பேசும் திறவை கொண்டவராக இருந்து உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 வயதில் குழந்தை உள்ளது. கணவரின் நடவடிக்கை தெரியவந்ததால் அவரது மனைவி இவரை பிரிந்து சென்றுவிட்டார். ஒஇன்னர் காரிலேயே தனது உல்லாச வாழ்க்கையை நடத்தி வந்த சஜு, உறங்குவது, ஓய்வெடுப்பது என அனைத்தையும் அதிலேயே கழித்துள்ளார். பெரும்பாலும் 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களை இலக்காக வைத்து அவர்களை வேலைக்கு அழைத்து செல்வதாக கூறி பலாத்காரம் செய்து நகை, பணத்தை பறித்துக்கொண்டு சென்று விடுவார்..

இடுக்கி மாவட்டத்தில் இவர் மீது புகார் தெரிவிக்கப்பட்டு சிறைக்கு சென்று வெளியே வந்துள்ளார். பின்னர் மீண்டும் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார்.

பல்வேறு செல்போன்களை பயன்படுத்தி வந்த சஜு இன்ஸ்டா மூலம் விதவிதமான ரீல்ஸ்களை வெளியிட்டு அதன் மூலமும் இளம்பெண்களிடம் பழகி வந்துள்ளார். அவரது வீடியோக்களில் இந்தி பேசும் பெண்களும் உள்ளதால் இவர் மற்ற மாநிலங்களிலும் பெண்களிடம் உல்லாச வாழ்க்கையில் ஈடுபட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகமடைந்துள்ளனர். சிறையில் உள்ள சஜுவை காவலில் இடுத்து விசாரித்தால் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என்பதால் அவரை கஸ்டடி எடுத்து விசாரிக்க கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். இவரது வலையில்ல் மேலும் பல பெண்கள் சிக்கி இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்