தூத்துக்குடியில் நிதி நிறுவனத்தில் ரூ.6 லட்சம் பணம் கொள்ளை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
தூத்துக்குடியில் ஒரு தனியார் நிதி நிறுவனத்தை இரவில் மூடிவிட்டு, காலையில் கடையை திறக்க சென்றபோது கடையின் ரோலிங் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது.;
தூத்துக்குடி, எட்டயபுரம் ரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் மூலமாக இருசக்கர வாகனங்களுக்கு கடன் உதவி அளித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் அந்த நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர். பின்னர் நேற்று காலையில் கடையை திறக்க வந்தபோது, கடையின் ரோலிங் ஷட்டர் உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கடை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ரூ.6 லட்சம் பணம் திருடு போயிருந்தது. இதுகுறித்து நிறுவனத்தின் மேலாளர் மகேஷ் அளித்த புகாரின் பேரில் தூத்துக்குடி, மத்தியபாகம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் சம்பவ இடத்தில் கைரேகைகளை பதிவு செய்ததோடு, இச்சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.