சாலை பணிகள்: தென் மாவட்டங்களுக்குச் செல்வோர், மாற்று வழிகளை பயன்படுத்த அறிவுறுத்தல்

செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை, படாளம் பகுதியில் மேம்பாலக் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கம் நடக்கிறது.;

Update:2025-08-14 16:46 IST

சென்னை,

நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. மேலும், வார விடுமுறை என தொடர் 3 நாட்கள் விடுமுறை வருகிறது. இந்த விடுமுறையை ஒட்டி சென்னையில் வசிக்கு வெளியூரை சேர்ந்த மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்வோர், ரெயில்கள் மூலமாகவும், பேருந்துகள் மூலமாகவும் செல்வது வழக்கம், மேலும் சிலர் தங்களது சொந்த வாகனங்கள் மூலம் பயணம் செய்வர்.

இதற்கிடையே, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், செங்கல்பட்டு மாவட்டம் புக்கத்துறை, படாளம் பகுதியில் மேம்பாலக் கட்டுமானம் மற்றும் சாலை விரிவாக்கம் நடக்கிறது. இதனால் அப்பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, தொடர் விடுமுறைக்கு ஊருக்கு செல்வோர், கிழக்கு கடற்கரை சாலை மற்று ஜிஎஸ்டி உள்ளிட்ட மாற்று வழிகளையும் மக்கள் பயன்படுத்த வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்