பாலியல் பலாத்கார வீடியோ... மாணவியை உல்லாசத்துக்கு அழைத்த வாலிபர்... அடுத்து நடந்த கொடூரம்
என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார்.;
கடலூர்,
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயதுடைய மாணவி, கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.டெக். முதலாம் ஆண்டு படித்து வந்தார். அப்போது இன்ஸ்டாகிராம் மூலம் கோவையை சேர்ந்த தனுஷ்(வயது 23) என்ற வாலிபருடன் மாணவிக்கு பழக்கம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தனுஷ், அந்த மாணவியை கோவையில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து மாணவியை அவர் பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் அதனை தனது செல்போனில் வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டார். அந்த வீடியோவை மாணவியிடம் காண்பித்து தனுஷ் பலமுறை உல்லாசம் அனுபவித்ததாக கூறப்படுகிறது.
அதன்பிறகு தனுஷ், தனது ஆசைக்கு சம்மதிக்கவில்லை என்றால் பாலியல் பலாத்கார வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுவிடுவேன் என்று கூறி மாணவியை மிரட்டியுளளார். இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த மாணவி, நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதையடுத்து மாணவியின் பெற்றோர், அவரை படிக்க வேண்டாம் என்று கூறி கோவையில் இருந்து சொந்த ஊருக்கு அழைத்து வந்தனர்.
இதையடுத்து தனுஷால் அந்த மாணவியை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவரது செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ஆத்திரத்தின் உச்சத்துக்கு சென்ற அவர், மாணவியை தேடி நெய்வேலிக்கு வந்தார். பின்னர் மாணவியின் வீட்டுக்கு சென்ற தனுஷ், அங்கு இருந்த மாணவியிடம் பாலியல் பலாத்கார வீடியோவை காண்பித்து உல்லாசத்துக்கு வருமாறு அழைத்தார்.
அதற்கு அவர் மறுப்பு தெரிவித்ததால், ஆத்திரமடைந்த தனுஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியின் தலையில் குத்தினார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் அக்காள், ஓடிவந்து தடுத்தார். அவரையும் தனுஷ் கத்தியால் வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த 2 பேரும் வலியால் அலறி துடித்தனர்.
இவர்களது சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மாணவி கொடுத்த புகாரின் பேரில் மந்தாரக்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுசை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.