தமிழ்நாட்டை பாராட்டிய சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்ரீராம்

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ஸ்ரீராம் தமிழ்நாட்டை பாராட்டியுள்ளார்.;

Update:2025-07-18 19:15 IST

சென்னை,

ராஜஸ்தான் ஐகோர்ட்டிற்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம்க்கு ஐகோர்ட்டின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

விழாவில் தலைமை நீதிபதி ஸ்ரீராம் பேசியதாவது:-

புகழ்மிக்க சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி வகித்ததில் பெருமை அடைவதாகவும், சென்னை ஐகோர்ட்டில் ஒன்பது மாத பதவிக் காலத்தில் அதிகளவில் கற்றுக் கொண்டுள்ளதாகவும், முழு திருப்தியுடன் விடைபெறுவதாகவும் குறிப்பிட்டார்.

சென்னை ஐகோர்ட்டில் ஏராளமான பெண் வழக்கறிஞர்கள் ஆஜராகின்றனர். அதேபோல் ஏராளமான பெண்கள் வழக்கறிஞர்களாக பதிவு செய்கின்றனர். தமிழ்நாடு நீதித்துறையிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 213 நீதிபதிகளில் 130 நீதிபதிகள் பெண்கள். இதற்கு மாநிலத்தை பாராட்டுவதாகவும் கூறி, கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக என்ற குறளையும் குறிப்பிட்டுப் பேசினார்.

தலைமை நீதிபதியின் பிரிவு உபச்சார விழாவில், பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றபோதும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் நிர்வாகிகள் எவரும் கலந்து கொள்ளவில்லை.

Tags:    

மேலும் செய்திகள்