கரடி விரட்டியதில் மின் கம்பத்தில் ஏறிய சிறுத்தை மின்சாரம் தாக்கி பலி
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சிறுத்தை உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.;
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் பெரும்பாலும் அடர் வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களாக உள்ளது இதனால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது உணவு குடிநீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடும் வனவிலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த நிலையில் குன்னூர் பாரஸ்டேல் ஸ்பிரிங்பீல்டு பகுதியில் சுமார் 2 வயதுடைய பெண் சிறுத்தைக் குட்டி கரடி விரட்டியதில் சிறுத்தை மின்கம்பத்தில் ஏரியதால் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தது.
இது குறித்து குன்னூர் வனத்துறை விசாரணை மேற்கொண்டு பிரேத பரிசோதனைக்கு பிறகு சிறுத்தையின் உடலை முறைபடி தீ மூட்டி எரித்தனர்.