சென்னையில் பெரம்பூர் - அம்பத்தூர் இடையே புதிய ரெயில் பாதை

பெரம்பூர் - அம்பத்தூர் இடையே ரூ.182.01 கோடி செலவில் இரு ரெயில் பாதைகள் அமைக்க தெற்கு ரெயில்வே பரிந்துரை செய்துள்ளது.;

Update:2025-07-18 20:38 IST

சென்னை,

சென்னையில் இருந்து வட மாநிலங்களுக்கும், வட மாவட்டங்களுக்கும் செல்லக்கூடிய ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன. இதனால், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் கடுமையான கூட்ட நெரிசலை சந்தித்து வருகிறது.

இந்நிலையில், இந்தக் கூட்ட நெரிசலை குறைக்கவும், பயணிகளின் பயணத்தை எளிதாக்கவும், தெற்கு ரெயில்வே பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவருகிறது. அந்த வகையில், சென்னை சென்ட்ரலில் கூட்ட நெரிசலை தவிர்த்து, புதிய பெரம்பூர் ரெயில் முனையத்துடன் இணைப்பு ஏற்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக பெரம்பூர் முதல் அம்பத்தூர் வரையிலான 6.4 கி.மீ தூரத்திற்கு மேலும் இரு ரெயில் பாதைகளை அமைக்க முடிவு செய்துள்ளது.

5-வது மற்றும் 6-வது ரெயில் பாதைகளுக்காக ரூ. 182.01 கோடியை தெற்கு ரெயில்வே ஒதுக்கி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தப் பணி 2028ஆம் ஆண்டு நிறைவடையும் எனவும், அதன்பிறகு ரெயில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கேளம்பாக்கம் ரெயில் நிலையம் அமைக்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவகிறது. அக்டோபரில் இது செயல்பாட்டுக்கு வர உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்