புறநகர் ரெயில் சேவை பாதிப்பு.. சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் 2 மணிநேரம் காத்திருக்கும் பயணிகள்
சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.;
சென்னை,
சென்னை வியாசர்பாடியில், மின்சார ரெயிலையும், மின் இணைப்புக் கம்பியையும் இணைக்கக்கூடிய க்ளிப் உடைந்தது. இதனால் பல ரெயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, சென்னை சென்ட்ரல் புறநகர் ரெயில் நிலையத்தில் சுமார் 2 மணிநேரமாக மின்சார ரெயில்கள் வராததால், பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். அத்துடன், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.