மதுரை: பெண்ணிடம் 2 பவுன் நகை பறிப்பு

கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு மர்ம நபர் தப்பி ஓடி விட்டார்.;

Update:2025-07-19 01:23 IST

மதுரை,

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி தாலுகா தென்னமநல்லூரை சேர்ந்தவர் இருளாயம்மாள் (வயது 27). இவர் கள்ளிக்குடியில் உள்ள பலசரக்கு கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று வேலை முடித்துவிட்டு தனது வீட்டுக்கு வருவதற்காக, இருசக்கர வாகனம் ஒன்றில் கள்ளிக்குடி- தென்னமநல்லூர் சாலையில் முனியாண்டிபுரம் அருகே வந்தார்.

அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் இருளாயம்மாள் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தில் மோதி அவரை கீழே தள்ளினார். பின்னர் அவர் கழுத்தில் இருந்த 2 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டார். இது குறித்து இருளாயம்மாள் வில்லூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

 

Tags:    

மேலும் செய்திகள்