மாதாந்திர பராமரிப்பு பணி: தென்காசியில் இன்று மின்தடை
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் இன்று மின்வாரிய மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.;
திருநெல்வேலி மின்பகிர்மான வட்டம், தென்காசி மாவட்டத்தில் சங்கரன்கோவில், கடையநல்லூர் கோட்டங்களில் இன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இந்த கோட்டங்களுக்கு உட்பட்ட துணைமின் நிலைய பகுதிகளில் பின்வரும் நேரங்களில் மின்தடை செய்யப்படும்.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
சங்கரன்கோவில் கோட்ட செயற்பொறியாளர் பாலசுப்ரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நக்கலமுத்தன்பட்டி ஆகிய உபமின் நிலையங்களில் இன்று (19.7.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மாதாந்திர பராமரிப்பு வேலைகள் நடைபெற இருப்பதால் மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி ஆகிய ஊர்களுக்கும், கலிங்கப்பட்டி, சத்திரப்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், செள்ளிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம் மற்றும் ரெங்கசமுத்திரம் ஆகிய ஊர்களுக்கும், திருவேங்கடம், உமையத்தலைவன்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம் மற்றும் குண்டம்பட்டி ஆகிய ஊர்களுக்கும், நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை ஆகிய ஊர்களுக்கும் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படுகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கடையநல்லூர் கோட்ட செயற்பொறியாளர் கற்பகவிநாயகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
விஸ்வநாதபேரி மற்றும் கடையநல்லூர் துணைமின் நிலையங்களில் இன்று (19.7.2025, சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் குறிப்பிட்டுள்ள நேரங்களில் மின்விநியோகம் பின்வரும் இடங்களில் இருக்காது.
காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை:
சிவகிரி, தேவிபட்டணம், விஸ்வநாதபேரி, தெற்குசத்திரம், வடக்குசத்திரம், வழிவழிக்குளம், மேலகரிசல்குளம், ராயகிரி, கொத்தாடைப்பட்டி, வடுகப்பட்டி, கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், மாவடிக்கால், குமந்தாபுரம், தார்காடு, போகநல்லூர், மங்களாபுரம், இடைகால், கொடிகுறிச்சி மற்றும் நயினாரகரம் ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.