சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்
சென்னையில் நாளை மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது.;
சென்னை,
சென்னையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாரத்தான் ஓட்டப்பந்தயம் நடைபெறுகிறது. காமராஜர் சாலை நேப்பியர் பாலத்தில் ஆரம்பிக்கும் இந்த ஓட்டப்பந்தயம் மெரினா கலங்கரை விளக்கம், மெரினா லூப் சாலை வழியாக பெசன்ட் நகர் வரை நடக்கிறது. பின்னர் அதே வழியில், ஓட்டப்பந்தய வீரர்கள் நேப்பியர் பாலம் வந்து தீவுத் திடலில் முடிக்க வேண்டும். இதையொட்டி, நாளை அதிகாலை 3 மணி முதல் மேற்படி ஓட்டப்பந்தயம் நடக்கும் சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என்று போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். எனவே, போக்குவரத்து மாற்றத்திற்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தரவேண்டும் என்றும் போக்குவரத்து போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.